Posts

பேரின்பத்தில் பெண் விருட்சங்கள்

கால் முளைத்த கன்று முதல், காலம் முடிந்த கட்டை வரை,  அனைத்தும் அழகாக அழிகிறது.  கோரமாக கீறப்படும் தோல்களும்,  வெறியால் வெட்டப்படும் அங்கங்களும்,  கூட்டமாக கிழிக்கப்படும் இலைகளும்,  மகிழ்ச்சியாக மடியும் உயிர்களும்,  பெண் விருட்சத்தின் பேரின்பங்கள்.  பொன் போன்ற வார்த்தைகளால்,  புகழாரம் சூட்டி போற்றிடுவோம்,  விருட்சத்தை மோட்சமடைய செய்தவரை…!